கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா

2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.

Instagram

ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.

கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாக தகவல்.

இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாக பதிவிட்டுள்ளார்.

தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரபலங்களும் ரசிகர்களும் ரம்பா மற்றும் அவரது மகளுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மஞ்சிமா இது எப்பம்மா? காதலை சொன்ன கவுதம் கார்த்திக்!

Follow Us on :-