கைவிட்ட கணவர்; ஐஸ்வர்யா அப்பா முதுகில் சவாரி?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 3-வது படமமான லால் சலாம் பூஜையுடன் துவங்கியது.

Webdunia

3-வது முறையாக இயக்குனர் தொப்பியை அணியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

' லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு, கலை இயக்குனராக ராமு தங்கராஜ், படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

தனது முந்தைய படங்களில் தனுசை கேமியோவுக்கு அழைந்த ஐஸ்வர்யா இப்போது விவாகரத்து காரணமாக தந்தையை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கிறார்.

ரொம்ப குழப்புறீங்களே..! ’காபி வித் காதல்’ படம் எப்படி?

Follow Us on :-