ரொம்ப குழப்புறீங்களே..! ’காபி வித் காதல்’ படம் எப்படி?

சுந்தர்.சி இயக்கத்தில் நடிக பட்டாளமே நடித்துள்ள ‘காபி வித் காதல்’ படத்தின் திரை விமர்சனம்!

Twitter

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, அம்ரிஹா, ரைசா, ஐஸ்வர்யா, யோகிபாபு என பெரும் நடிக பட்டாளமே நடித்து வெளியாகியுள்ள காமெடி படம் ‘காபி வித் காதல்’

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி நால்வரும் சகோதர சகோதரிகள். திருமணமான ஸ்ரீகாந்துக்கு மனைவி மேல் ஆசை குறைந்துவிட வெளியே அலைப்பாய்கிறார்.

நல்ல வேலையில் இருக்கும் ஜீவாவுடன் லிவ் இன் ரிலேஷனில் இருந்த ஐஸ்வர்யா அவரை ப்ரேக் அப் செய்து ஏமாற்றி விடுகிறார்.

ஜெய் மணக்க திட்டமிட்டிருந்த தொழிலதிபரின் மகளுக்கும் ஜீவாவுக்கும் காதல் மலர்கிறது. ஜெய் தனது சிறுவயது தோழியாக இருந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகிறது. ஜீவாவுக்கும், தொழிலதிபரின் மகளுக்கும் திருமணம் ஏற்பாடு ஆகிறது.

Twitter

ஆனால் ஸ்ரீகாந்த் இந்த திருமணத்தை சதி செய்து தடுக்க பார்க்கிறார். ஜீவாவுக்கு திருமணம் நடந்ததா? ஜெய் தன் காதலில் வென்றாரா? ஸ்ரீகாந்த் ஏன் சதி செய்தார்?

Twitter

போன்ற கேள்விகளுக்கு காதல் மற்றும் காமெடி கலந்து பதில் சொல்லியிருக்கிறது படம். படத்தின் சிக்கல்கள் புரிவதற்குள் பாதி படம் முடிந்து விடுகிறது.

வழக்கமான சுந்தர்.சியின் காமெடி, காதல் கதை என்றாலும் சில காமெடி காட்சிகள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. யோகிபாபு, கிங்ஸ்லி காமெடிகள் சுமாராக உள்ளன.

யுவன் சங்கரின் இசையில் பாடல்கள் ஓ.கே. காமெடி காரணமாக உணர்வுரீதியாக சில இடங்கள் ஒட்டவில்லை.

இயக்குநருடன் மோதல்? மாவீரன் ஷூட்டிங் நிறுத்தம்?

Follow Us on :-