வெச்ச கண்ண எடுக்க முடியலயே! ப்ரியங்கா மோகன் க்யூட் போட்டோ!

தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்ட ப்ரியங்கா மோகனின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது விருப்பமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா மோகன்.

இவர் 20 நவம்பர் 1994ல் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.

2019ல் கன்னடத்தில் வெளியான ‘ஒந்த் கதெ ஹெல்லா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் ‘நானி கேங் லீடர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தமிழில் ‘டாக்டர்’ படம் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் கொள்ளைக் கொண்ட ப்ரியங்கா மோகன் தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுத்து தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இன்று அவரது பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவன கொள்ளை; கலங்கடிக்கும் கலகத் தலைவன்!

Follow Us on :-