கார்ப்பரேட் நிறுவன கொள்ளை; கலங்கடிக்கும் கலகத் தலைவன்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள கலகத் தலைவன் படத்தின் விமர்சனம்!

Red Giant Movies

வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் வேலை பார்க்கிறார். அந்த அலுவலகத்தில் சில ஆவணங்கள் காணாமல் போகின்றன.

இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர் ஆரவ். வஜ்ரா நிறுவனத்தில் ஆவணங்கள் காணாமல் போவதை கண்டுபிடிக்க ஆரவ் குழு இறங்குகிறது.

பலரை பிடித்து விசாரிக்கும் ஆரவ், கடைசியில் ஆவணங்களை திருடியது உதயநிதிதான் என்பதை கண்டுபிடிக்கிறார்.

ஆனால் உண்மையில் உதயநிதி யார்? பணியாளராக நடித்து ஆவணங்களை திருடியது ஏன்? உள்ளிட்ட பல பரபரப்பான கேள்விகளுக்கு விருவிருப்பாக கதை சொல்கிறது படம்.

உதயநிதியின் நடிப்பு படத்திற்கு தேவையான அளவு உள்ளது. ஆரவ் தனக்கான பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கலையரசன் சில காட்சிகளே தோன்றினாலும் கவனம் ஈர்க்கிறார்.

நிதி அகர்வால் வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் போல இல்லாமல் தனது வித்தியாசமான கதாப்பாத்திரத்தால் கவர்கிறார்.

கார்ப்பரேட் கொள்ளை, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசியுள்ள மகிழ் திருமேனியின் மற்றுமொரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.

யூகிக்கவே கஷ்டமா இருக்கே? ‘யூகி’ எப்படி இருக்கு?

Follow Us on :-