குடும்பத்தை இணைக்கும் கபடி! பட்டத்து அரசன் எப்படி இருக்கு?

அதர்வா நடித்து திரையரங்கில் வெளியாகியுள்ள ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஷார்ட் விமர்சனம்!

Twitter

ஒரு கிராமத்தில் இரண்டு மனைவி கட்டி பெரும் குடும்பமாக வாழ்ந்து வரும் ராஜ்கிரண், முன்னாள் கபடி வீரரும் கூட.

ராஜ்கிரணின் இரண்டாவது மனைவி வழி பேரன் அதர்வா தாத்தா மீது அதிகமான அன்பு கொண்டவன். ஊரில் ராஜ்கிரணுக்கு ஏக மரியாதை.

இடையே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையால் இரண்டாவது மனைவியின் குடும்பம் ராஜ்கிரணை பிரிகிறது. ஊரில் ராஜ்கிரண் பேரில் உள்ள கபடி குழுவையும் கலைக்க முயற்சி நடக்கிறது.

அதை தடுக்க களம் இறங்கும் அதர்வா தனது குடும்பத்தை வைத்தே கபடி அணியை உருவாக்குகிறார். அந்த அணியை வென்றால் கிராமத்தினர் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறுகிறார்.

இந்த கபடி போட்டி மூலம் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? போட்டியில் வென்று தாத்தாவின் கௌரவத்தை காப்பாற்றினாரா? என்பது மீதக் கதை.

Twitter

கிராமத்து இளைஞராக சிறப்பாக நடித்துள்ளார் அதர்வா. நாயகி ஆஷிகா ரங்கநாத் தேவையான அளவு முகபாவங்களின் மூலம் கவர்கிறார்.

Twitter

எனினும் கதாப்பாத்திரங்களிடையே வரும் உணர்ச்சிகரமான உரையாடல், கபடிக்கு ஆள் சேர்க்கும் காட்சிகள் சோர்வை தருகிறது. ஒளியமைப்பு, இசை சிறப்பாக அமைந்துள்ளது.

Twitter

கிராமத்தில் காமெடி டிடெக்டிவ்! ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ விமர்சனம்!

Follow Us on :-