கிராமத்தில் காமெடி டிடெக்டிவ்! ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ விமர்சனம்!

சந்தானம் நடித்து வெளியாகியுள்ள டிடெக்டிவ் கதையான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் விமர்சனம்!

Twitter

கிராம ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்த குழந்தை கண்ணாயிரம் (சந்தானம்).

இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாததால் ஜமீன்தாரின் முதல் மகன்களால் அவமானப்படுகிறார் கண்ணாயிரம்.

நகரத்தில் சிறிய குற்றங்களை துப்பறியும் கண்ணாயிரம், தன் தாய் இறந்த செய்தியறிந்து கிராமத்திற்கு செல்கிறார்.

அந்த கிராமத்தில் சொத்து விவகாரத்தால் கண்ணாயிரம் தங்கியிருக்க, தீடீரென அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன.

அதை துப்பறிய முயலும் கண்ணாயிரத்தை திசைத்திருப்ப எதிரி கும்பல் மறைமுகமாக பல வேலைகள் செய்கின்றது.

Twitter

இதையெல்லாம் தாண்டி கண்ணாயிரம் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? மறைமுகமாக திரியும் எதிரிகளை கண்டுபிடித்தாரா? என்பது மீத கதை.

Twitter

சந்தானத்தில் அலட்டல் இல்லாத நடிப்பும், நறுக் வசனங்களும் சிரிப்பை வரவழைக்கின்றன. ரியா சுமன் சரியான அளவு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Twitter

நகைச்சுவையாக இருந்தாலும் டிடெக்டிவ் கதைகளுக்கு உரிய விறுவிறுப்பு இல்லாமல் படம் மெதுவாக நகர்வது போல சில இடங்களில் உள்ளது.

சீறி வரும் காரி! எப்படி இருக்கு சசிக்குமாரின் ‘காரி’?

Follow Us on :-