என் மானமே போச்சு..! இயக்குனர் செயலால் நடிகை புலம்பல்!

நடிகை மஹிமா நம்பியார் தூங்கியபோது படம்பிடித்த இயக்குனர்

Instagram

தமிழில் பிரபலமாக உள்ள இளம் நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார்

கேரளாவில் பிறந்த இவர் மலையாளத்தில் கார்யஸ்தன் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

தமிழில் சாட்டை படம் மூலம் அறிமுகமான மஹிமா நம்பியார் தொடர்ந்து குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, அசுரகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் ‘ரத்தம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார்.

ஷூட்டிங் சென்றபோது மஹிமா தூங்கியதை போட்டோ எடுத்து கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.

அதற்கு விஜய் ஆண்டனி “அவங்க Hardwork பண்றதை பாக்கும்போது என்ன பாக்குற மாதிரியே இருக்கு” என கூறியுள்ளார்.

இவர்களின் கிண்டலுக்கு பதிலளித்த மஹிமா ”அய்யய்யோ. என் ஸ்டைல் போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு” என விளையாட்டாக சொல்லியுள்ளார்.

Instagram

இந்த புகைப்படமும், மஹிமாவின் பதிலும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Instagram

குழந்தை பெத்துக்கணும்... நயனுக்கு முளைத்த ஆசை??

Follow Us on :-