சூப்பர்ஹீரோ ஆன சூப்பர்வில்லன்? – ப்ளாக் ஆடம் விமர்சனம்!

ராக் நடித்து வெளியாகியுள்ள ப்ளாக் ஆடம் சூப்பர் ஹீரோ படத்தின் விமர்சனம்

Warner Bros

பிரபலமான DC காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ‘ப்ளாக் ஆடம்’ திரைப்படமாக வெளியாகியுள்ளது.

கி.மு 2600ல் இருந்த மிகப்பெரிய காண்டாக் ராஜ்ஜியத்தின் அரசன் ஆன் காட். அவன் நிறைய சக்திகள் தரக்கூடிய சபாக் க்ரீடத்தை உருவாக்குகிறான். அது மிகப்பெரும் சக்திகளை அவனுக்கு தருகிறது.

ஆனால் சாஸமின் சக்திகளை பெறும் அடிமை வீரன் டெத் ஆடம் என்பவன் ஆன் கோட்டை கொன்று அவனது ராஜ்ஜியத்தை முடிக்கிறான். அதற்குள்ளேயே அவன் சிறையாகிறான்.

இந்த காலக்கட்டத்தில் ஆய்வுக்கு செல்லும் ஒரு குழு அவனை விடுதலை செய்துவிட நகரத்திற்குள் நுழையும் ப்ளாக் ஆடம் நகரத்தை நாசமாக்குகிறான்.

அவனை கட்டுப்பாட்டில் கொண்டுவர டாக்டர் ஃபேட், சைக்ளோன், ஹாவ்க் மேன், ஆட்டம் ஆகியோர் கொண்ட ஜஸ்டிஸ் சொசைட்டி ஆப் அமெரிக்கா என்ற சூப்பர்ஹீரோ குழு சென்று அவனுடன் மோதுகின்றனர்.

Warner Bros

அதேசமயம் அழிந்தொழிந்த ஆன் கோட் அரசனின் வழி வந்த இஸ்மாயில் என்பவன் மீண்டும் சபாக் கிரீடத்தை கண்டுபிடித்து தனது மூதாதையர் ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கிறான்.

Warner Bros

ப்ளாக் ஆடம் புதிய சூப்பர்ஹீரோ குழுவுடன் இணைந்தானா? கிரீடத்தை தேடும் இஸ்மாயிலை வென்றானா என்பது ஆக்ஷன் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.

Warner Bros

ட்வெய்ன் ஜான்சன் ப்ளாக் ஆடமாகவும், பியர்ஸ் ப்ராஸ்னன் டாக்டர் ஃபேட்டாகவும் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாக ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

தொடர் தோல்வியால் பூஜா அப்செட்

Follow Us on :-