Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

அரசு சீருடை வழங்காததை கண்டித்து கலர் சட்டை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஓட்டுநர்கள்

அரசு சீருடை வழங்காததை கண்டித்து கலர் சட்டை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபடும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தி மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சாதாரண உடைகள் அணிந்து பேருந்துகளை இயக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் உள்ள 16 பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளாக சீருடை வழங்கவில்லை என கூறி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து கழக நிர்வாக ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு 2 செட் சீருடைகள் ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். 2016ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் வழங்குவதாக அறிவித்தார் ஆனால், 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சீருடை என்பது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நீண்ட போராட்டங்களுக்கு பின் 2019ஆம் ஆண்டு 1 செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2020 முதல் நடப்பாண்டு வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.மதுரையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அலுவலர்கள் என 5,500 பேர் பணியாற்றி வருகிறார்கள் இதில் 700 பேர் சீருடை அணியாத பணியாளர்கள். மற்ற அனைவரும் சீருடை பணியாளர்களாக உள்ளனர். மதுரையில் உள்ள 700 அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் என 2800 பேர் வரை 2 ஷிப்டுகளாக பேருந்துகளை இயக்குகிறார்கள். இவர்கள் தங்களுக்கு சீருடை வழங்காமல் இருப்பதை வெளிப்படுத்தியும், தங்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போராட்டத்தி்ல ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினால் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காக சீருடை அணியாமல் சாதாரண கலர் சட்டைகளை அணிந்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.