Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

சுவர் இடிந்து விழுந்து 17பேர் உயிரிழந்த தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு பேரணி

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலணி பகுதியில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17பேர் உயிரிழந்த தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அனுமதி இன்றி பேரணி நடத்த முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த சொகுசு பங்களா ஒன்றின் சுவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மழையின் காரணமாக இடிந்து அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர் இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இச்சம்பவம் நடைபெற்று 3 ஆண்டு ஆகிய நிலையில் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது அதனையொட்டிஇன்று அப்பகுதியில் நினைவஞ்சலி செலுத்த கட்சியினருக்கும்,அமைப்புகளுக்கும் தமிழக காவல் துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்,கோவை சாலையில் உள்ள காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி,தமிழ்ப்புலிகள்,திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தடையை மீறி நினைவஞ்சலி செலுத்த ஒன்று திரண்டனர்.பின்னர்,17 பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும் பிரச்சனை க்குரிய சொகுசு பங்களாவின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் அதற்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர் பின்னர்,கோஷம் எழுப்பியவாறே நினைவஞ்சலி செலுத்த மேட்டுப்பாளையம் கோவை சாலையில் பேரனி செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர் அப்போது,அஞ்சலி செலுத்த சென்றவர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். தடையை மீறி நினைவஞ்சலி செலுத்த முயன்றதாக மேட்டுப்பாளையத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.