Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

SBI மற்றும் LICல் பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து.

கோவை SBI மற்றும் LICல் பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டம். கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ பிரதான அலுவலகம் முன்பு, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்ததாக கூறியும், மோடி அரசை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதானிக்கும் அம்பானிக்கும் எல்ஐசி சொத்துக்களை விற்கக் கூடாது, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் முதலீடு செய்தது நடுத்தர வர்க்கத்தினர் சேமித்த பணம் அதனை விற்கக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்கக்கூடாது, உள்ளிட்ட கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி யில் பொதுமக்களின் முதலீடுகளை, மோடியின் நண்பர்களான அதானிக்கும் அம்பானிக்கும் மோசடியாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி பிற்காலத்தில் அந்தக் கடனை வாராத கடனாக மாற்றி வைப்பதற்காக இந்த மோசடி நடைபெறுகிறது என தெரிவித்தார். பொதுமக்களின் பணத்தை அபகரிக்கும் பிரதமர் மற்றும் மந்திரி சபையின் கூட்டு மோசடியை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். மேலும் இதில் பிரதமர் ஏ1(குற்றவாளி) எனவும் நிதி அமைச்சர் ஏ2(குற்றவாளி) எனவும் கூறிய அவர் இது குறித்து நிதி அமைச்சர் இடம் விளக்கம் கேட்டால் மலுப்பலாகதான் பதில் அளிக்கிறார் என தெரிவித்தார்.