Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூலியை உயர்த்தி தர வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு அவர்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். இது குறித்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூலி உயர்வு குறித்த தீர்மானம் மேலோட்டமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் 25 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறி இருந்தனர். அதன்படி நேற்றைய தினம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கூலியை உயர்த்தி தர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழக அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு வந்த பாஜக மகளிரணி தலைவர் மற்றும் தெற்கு தொகுதி எம் எல் ஏ வானதி சீனிவாசன் தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.