Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

தீவிவரவாத சம்பவம் - மாநகர உளவுத்துறையின் தோல்வி ஜக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடிவிபத்திற்கு பிறகு, ஒரு அசாதாரண சூழலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்காக மாநகர ஆணையரை சந்திக்க வந்ததாக கோவை மாவட்ட ஜக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாத செயலில் ஈடுபட முயற்சி எடுத்திருக்கிறீர்கள். கடவுள் கோவை மாநகர மக்களை காப்பாற்றி இருக்கிறார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கான தண்டனையை கடவுள் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கோவையில் இருப்பதாகவும், அவர்களை கண்டுபிடித்து தீவிரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீகிரவாதத்தை ஒழிக்க ஜக்கிய ஜமாத் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருவதோடு இணைந்தும் செயல்படும் என தெரிவித்தார். மாநகர ஆணையரை சந்திக்க வந்ததன் முக்கிய நோக்கமே மாநகர உளவுப்பிரிவு செயல்படவில்லை. அவர்கள் முறையாக அரசுக்கு தகவல் சொல்லவில்லையா என்ற கேள்வி எழுகிறது. மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் குனியமுத்தூர், உக்கடம், பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் புதிதாக போடப்பட்ட உளவுத்துறை காவலர்களை எடுத்துவிட்டு, அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களையே பணியமர்த்த வேண்டும். அப்போது தான் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை ஒழிக்க முடியும் என்றார்.