Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

2024ம் ஆண்டே சட்டமன்ற தேர்தல் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல - அண்ணாமலை பேச்சு

திமுக எம்.எல்.ஏ தாம்பரத்தில் தொழிலதிபரை மிரட்டியவரை சம்பவத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர் மட்டும் போட்டு விட்டு விட்டார்கள். ஆனால் அவரை கைது செய்யவில்லை. கேரள முதலமைச்சர் கோல்டு ஸ்மக்ளிங் கேடி பினராயி விஜயன் தமிழக முதலமைச்சரோடு சேர்ந்து முல்லை பெரியார் விஷயத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார். பரம்பிக்குளம் அணையில் ஒரு மதகு உடைந்து 6 டி எம் சி தண்ணீர் வீணாக போகிறது. பரம்பிக்குளம் அணையில் சரியாக பராமரிப்பு செய்யவில்லை. ஒரு கோடி ரூபாய் அந்த அணையை பராமரிக்க செலவாகும் நிலையில் வெறும் 15 முதல் 20 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதம் 80 லட்சம் ரூபாய் கமிஷனாக போய்விட்டதால் தண்ணீர் வீணாகியுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறை வரும் அபாயம் உருவாகியுள்ளதுல். சிறுவாணியில் 40 அடிக்கு மேல் தண்ணீர் உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் கலெக்ஷன், சோலார் மின் சாரம் போட கமிஷன்,மாநகராட்சி டெண்டர்களுக்கு கமிஷன், தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்றிவிட்டு அதிலும் கமிஷன் , கட்சிக்குள் பதவி வாங்க பணம், ஏற்றிய மின்சார கட்டணத்தை குறைக்க காசு, என கோவை சொத்தை சுரண்டி சுரண்டி கோபாலபுர குடும்பத்தை வளப்படுத்த நினைக்கிறார். கடந்த 1966ம் ஆண்டு ராமாயணம் எதிர்ப்பு போரட்டம் நடத்தினர். ராமனை வைத்து அடுத்த 15 ஆண்டுகள் அரசியல் செய்தனர். இன்றைக்கு உலகம் முழுவதும், கம்பன் கழகம் இருக்கிறது அதற்கு காரணம் திமுக தான். அதே போல சனாதன தர்மத்தை பட்டி தொட்டியெல்லாம் திமுகவினர் கொண்டு செல்கிறார்கள். இப்போது சனாதன தர்மத்தின் மீது கைவைத்திருக்கிறார்கள். எங்கள் மீது கைவைத்த காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் பணி ஓய்வு பெறும் போது பென்சன் பணம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் பொறுப்பல்ல. 99 சதவீத காவலர்கள் நேர்மையானவர்கள். ஆளும் அரசுக்கு அடிமையாக இருக்க மாட்டேன் என்று கூறும் காவல்துறையினரும் உள்ளனர். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். பா.ஜ.க தொண்டர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவார்கள். அதனை செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. முதலமைச்சர் நடுநிலையாக நடந்துகொள்ளும் வரை பாஜக விடாது. ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்துவிட்டு செல்லுங்கள். நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.