Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

'வெண்ணிலா கபாடி குழு' திரைப்பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

'வெண்ணிலா கபாடி குழு' திரைப்பட நடிகர் ஹரி வைரவன் காலமானார் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து வெண்ணிலா கபாடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மதுரை அருகே அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபாடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை கடச்சனேந்தலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோது அவருக்கு, நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நடிகர் சூரி உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பலர் உதவி செய்தனர். உடல் நிலை மீண்டு வந்த நிலையில், நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்தது, திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர். மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.