விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். அதாவது யார் கூப்பிட்டாலும் உடனே ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக பூஜிக்கும் வகையிலும் இருக்கிறார். இனி கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தை பற்றி பார்ப்போம்... விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் பெருக்கி மெழுகி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத்...