Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை மாவு இடியாப்பம் செய்ய...!

Webdunia
கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
தேவையானவை:
 
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - ருசிக்கு ஏற்ப
சர்க்கரை - தேவையான அளவு 
தேங்காய் பூ - அரை கப் 
ஏலப்பொடி - சிறிதளவு
 
செய்முறை:
 
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கோதுமை மாவை அப்படியே ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க  ஆரம்பித்ததும்  இட்லி  தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும். சுமார் 20 நிமிடங்களுக்கு அவித்து எடுக்கவும்.

அந்த மாவை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்துகொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும். இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு  சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.
 
மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு  இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.
 
சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம். அல்லது விருப்பமான குருமாவுடன்  சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments