கொத்தமல்லி சட்னி தயாரிக்க இரண்டு வழிகள்...!

Webdunia
தேவையான பொருட்கள்: (வழி - 1)
 
கொத்தமல்லி - 1 கட்டு 
தக்காளி - 1 (தோலுரித்து துண்டு) 
பூண்டு - 5-6 பல் 
பச்சை மிளகாய் - 3-4 
சீரகம் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அதனைப் போட்டு,  அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர் ஊற்றி  அரைக்க வேண்டும். பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், சட்னி  சுவையாக இருக்கும்.

 
தேவையான பொருட்கள்: (வழி - 2)
 
கொத்தமல்லி - 1 கட்டு 
பச்சை மிளகாய் - 3-4 
சீரகம் - 1 டீஸ்பூன் 
வேர்க்கடலை - சிறிது 
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
கொத்தமல்லியை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். * பிறகு மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனுடன் தயிர், பச்சை  மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். இறுதியில் வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை அரைத்தால், கொத்தமல்லி சட்னி  தயார். இந்த சட்னியில் தயிர் சேர்த்திருப்பதால், இது வெள்ளை கலந்த பச்சையுடன் காணப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments