Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த கோவைக்காய் வறுவல் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
கோவைக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்)
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். 
 
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து  மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
 
சுவையான கோவைக்காய் வறுவல் தயார். இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை நேரத்தில் உடல்நலத்தை காக்க சில டிப்ஸ்

கனவுகளுக்குள் தொடர்பு கொள்ளும் புதிய டெக்னாலஜி! அமெரிக்க நிறுவனம் சாதனை!

நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கெடுதலா?

சுரைக்காய்க்கு உப்பு இல்லை.. இந்த கிண்டலான வாக்கியத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments