Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சாதம் செய்ய....!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு
அரிசி - 1 1/2 கப்
 
அரைக்க தேவையான் பொருட்கள்:
 
கொத்தமல்லி தழை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
உப்பு - ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

 
செய்முறை:
 
* அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
 
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
 
* வெங்காயம் வதங்கியம் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன்  சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments