Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா துவையல் செய்ய....!

Webdunia
தேவையானப் பொருட்கள்: 
 
கோங்குரா கீரை(புளிச்சைக்கீரை) - 1 ½ கப்
பச்சை மிளகாய் - 12
பெரிய வெங்காயம் - 1 
தனியா - 1 ½ டீஸ்பூன்
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
கடுகு - ¼ டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: 
 
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும். பொரிந்தவுடன் தனியே எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெய்யில் தனியா, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும். 
 
சிறிது எண்ணெயில் தனியே கோங்குரா கீரை இலையைச் நன்கு சுருங்கும்வரை வதக்கவும். 
முதலில் வறுத்த பொருட்களையும், பின்னர் வதக்கிய கீரையையும் சேர்த்து இடித்து, கடைசியில் நறுக்கிய வெங்காயத்தையும், உப்பையும் சேர்த்து இடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, சிறிது கடுகு சேர்த்து, அதில் நசுக்கிய பூண்டைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். இடித்த கோங்குராவை அதில் நன்றாகக் கலந்துகொள்ளவும். சுவை மிகுந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா துவையல்  தயார். இவை சூடான சாதம், களியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments