Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் தூதுவளை தோசை செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் - அரிசி 1 கப்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 மேஜைக்கரண்டி
தூதுவளை இலைகள் - 1 கப்
பச்சை மிளகாய் - 6 (அ) காய்ந்த மிளகாய் - 8
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இதனுடன் சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்துகரைத்து 3 மணி நேரம் வைத்திருங்கள். புளித்துவிடும். குளிர் காலத்தில் அதிக நேரம் தேவைப்படலாம்.
 
சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள். ஆரோக்கியம் தரும் தூதுவளை தோசை தயார். இவற்றுடன் தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி சாப்பிட சுவை கூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments