கோவைக்காய் வறுவல் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
கோவைக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்)
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும்.

அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும்.  பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
 
சுவையான கோவைக்காய் வறுவல் தயார். இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

அடுத்த கட்டுரையில்
Show comments