Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதமான சுவையில் அரைக்கீரை கூட்டு செய்ய !!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:49 IST)
தேவையான பொருள்கள்:

அரைக் கீரை - 2 கட்டு
கடுகு - அரை ஸ்பூன்
தக்காளி - 4
வெங்காயம் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு - 100 கிராம்
சாம்பார் பொடி - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

கீரையை நன்றாக ஆய்ந்து, நீரில் அலசி எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய கீரையோடு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரில் வேகவைத்து எடுத்து கடைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்புப் போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இதில் வேகவைத்த கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான அரைக்கீரை கூட்டு தயார்.

பலன்கள்: இந்த கூட்டு, சளி, முடி கொட்டுதல், கண் பார்வை கோளாறுகள் போன்றவற்றிக்கு ஏற்ற மருந்தாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments