Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பா ரவை பொங்கல் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சம்பா ரவை - ஒரு கப்
பாசிப்பருப்பு - முக்கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கீற்று
நெய் (அ) எண்ணெய் தேவையான அளவு

 
செய்முறை:
 
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கடாயில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சம்பா ரவையுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை  வேகவிடவும்.
 
ஒரு பாத்திரத்தில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், சீரகம், மிளகு சேர்த்து தாளிக்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
 
வேக வைத்த சம்பா ரவை, பாசிப்பருப்புடன் தாளித்தவற்றைக் கொட்டி நன்றாகக் கிளறவும். சுவையான சம்பா ரவை பொங்கல்  தயார். சிறிது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments