Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
காளான்கள் - 15
இஞ்சி, பூண்டு - ஒரு தேக்க‌ர‌ண்டி
வெங்காய‌த்தாள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
ப‌‌ச்சை மிள‌காய் - 3
சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
மிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
சாத‌ம் - 4 கப் (வ‌டித்து ஆறவைத்தது)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
முத‌லில் பட்டன் காளான்களை எடுத்துக்கொண்டு நீரில் சுத்தப்படுத்தி, நன்கு நறுக்கிக்கொள்ளவும். பின்னர், பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு, அதை  நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயையும் வெங்காயத்தாளையும்  பொடியாக சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 
ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடாக்க‌வும். பின், வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை  ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.  அடுத்து பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கியதை சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்கவும். 
 
அடுத்து அனைத்தையும் நன்கு கிளறி வதக்கும்போது வெங்காயம், பச்சைமிளகாய், காளான்கள் அனைத்தும் நன்கு கலந்திருக்கும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த  சாதத்தைக் கொட்டி கிளறவும்.
 
பின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றைச் சேர்த்து வாணலி சூட்டிலேயே இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சூடான அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?

காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments