Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான வெஜிடபிள் வடை செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
விருப்பமான காய்கள் - 3 வகைகள் (கேரட், பீன்ஸ், கோஸ்)
பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு - 2 கப்
மிளகாய் வற்றல் - 8
உப்பு - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை:
 
காயை சுத்தமாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு அது கொதித்ததும் நறுக்கிய காய் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கவும். 
 
பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், அரிசி மாவு, உப்பு எல்லாம் உரலில் அல்லது மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். இந்த பவுடரை வெந்த காயுடன் சேர்த்து கலந்து போதிய தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். 
 
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கத் தொடங்கியதும் கலவையை வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்ததும் எடுத்துக்  கொள்ளவும். தேவைப்பட்டால் இதனுட வெங்காயம் சேர்த்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments