சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்ய...!

Webdunia
தேவையானவை: 
 
கடலை மாவு - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சிறிய பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி -  ஒரு சிறிய துண்டு
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும். 
 
இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை  மாவை பஜ்ஜி  மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
 
குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments