சுவையான காளான் கிரேவி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்லரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பொடிதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அலவு
கருவேப்பிலை - சிறிதளவு
 
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - சிறிதளவு
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு பற்கள் - 4
இஞ்சி - 1 துண்டு
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
ஊறவைத்த புளி - ஒரு துண்டு
செய்முறை:
 
முதலில் மசாலாவை வதக்கி அரைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அவற்றில் ஒரு ஸ்பூன் தனியா விதை ஒரு தேக்கரண்டி, சீரகம், சோம்பு ஒரு தேக்கரண்டி, 1/2 கரண்டி மிளகு  நான்கு பற்கள் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 4 மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின்னர் துருவிய தேங்காயை வதக்கி, பின் அதனுடன் ஊறவைத்த புளியை சேர்த்து மிக்சியில் மைப்பொல் நன்கு அரைத்து எடுத்து  கொள்ளவும். 

மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அவற்றில் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்த பின் 1/2 தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு கருவேப்பிலை,  வெங்காயம், தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள். மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்றாக வதக்கவும்.
 
பின்னர் இதனுடன் காளானை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைத்து திக்காக வந்ததும் இறக்கவும். சுவையான காளான் மசாலா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments