Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொறுமொறுப்பான வெங்காய பக்கோடா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
கடலை மாவு - 100 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். 
நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவேண்டும் பிறகு ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவேண்டும்.
 
தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளவும்.
 
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்மிதமானதீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெய்யை வடியவிட்டு பின் பரிமாறவும். சுவையான மொறுமொறுப்பான வெங்காய பக்கோடா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி?

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments