Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேமியா கிச்சடி செய்ய....!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சேமியா - ஒரு கப்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - கால் கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் (மூன்றும் கலந்தது) 
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சேமியாவை வறுத்துக் கொள்ளவும். நன்கு கழுவி நறுக்கிய காய்கறிகளை 5 நிமிடம் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த காய்கறிகள்  சேர்த்துக் கிளறவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
 
பிறகு, வறுத்த சேமியாவை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன் நெய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சுவையான கிச்சடி சாப்பிட தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments