முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.