Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் செய்திடலாம் வெஜ் பிரைடு ரைஸ்...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பிரியாணி அரிசி - 2 குக்கர் கப்
எண்ணெய் - தேவையான அளவு
கிராம்பு - 3
பூண்டு - 4 (நசுக்கியது)
ப்ரொக்கலி - 1/4 கப்
முட்டை கோஸ் - 1/4 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
அஜினோமோட்டோ - 1 பின்ச்
குடைமிளகாய் - 1
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
வெள்ளை வெங்காயம் - 1/2 கப்
காலிப்பிளவர் - 1/4 கப்
தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுதூள் - 1 டீஸ்பூன்
பட்டர் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 இன்ச்
தொத்தமல்லி இலை - 1/2 கப் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் அரிசியை வேகவைத்து உதிரிஉதிரியாக வடித்து கொள்ளவும். எண்ணெய், பட்டர் காயவைத்து அதில் பட்டை, கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும். அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு குடைமிளகாயை மீடியமாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
 
காலிப்பிளவர், ப்ரொக்கலி, முட்டை கோஸ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அஜினோமொடொ மர்றும் காய்கறிகள் நன்கு வதங்கிய பின் சிறிது உப்பு சேர்க்கவும். குடைமிளகாயை மற்றும் காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 
 
பிறகு வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலையை போட்டு நன்கு கிளறி ஸ்ம்மில் வைத்து இறக்கவும். சுவையான வெஜ்  பிரைடு ரைஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments