இட்லி மாவு போண்டா

இட்லி மாவு போண்டா

Webdunia
தேவையானவை:  
 
இட்லி மாவு - 2 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 3 
தேங்காய் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
 
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
 
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்


 
 
செய்முறை:
 
எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். 
 
சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியது தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள். 
 
எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்தினர் வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

Show comments