வீட்டிலேயே சாம்பார் பொடி செய்வது எப்படி...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா - 1/2 கிலோ
மிளகு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:
 
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது  மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
 
இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் கமகமவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும்போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
 
குறிப்பு:
 
சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments