ஜீரா புலாவ் செய்வது எப்படி...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
நெய் - 2 மேஜைக்கரண்டி 
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிய துண்டு 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1

 
செய்முறை:
 
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
 
அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும். சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
 
பச்சை வாடை போனதும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக  கலக்கி மூடி போட்டு மூடவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10  நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.  சுவையான ஜீரா புலாவ் தயார். குருமாவுடன் சாப்பிட நன்றாக சுவை சூப்பராக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

அடுத்த கட்டுரையில்
Show comments