Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கொண்டைக்கடலை - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
எண்ணெய் - தாளிக்க (தேவைக்கு ஏற்ப) 

செய்முறை:
 
கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும். சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments