Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான முறையில் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி..?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உதிராக வடித்த பச்சரிசி சாதம் - 2 கப்
துருவின தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
பச்சைமிளகாய் - 1
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு - கைப்பிடி அளவு

செய்முறை:
 
இஞ்சியை துருவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல்,  மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
 
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments