Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 
டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது) 
மிளகு தூள் - 1/2 
டீஸ்பூன் பட்டை - 1 துண்டு 
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க  வேண்டும். 
 
பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு,  தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும்  முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாதம்  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments