Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் துவையல் செய்ய !!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:25 IST)
தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 10
காய்ந்த மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை ஸ்பூன்
பெருங்காயம்  - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

முதலில் நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில்  உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து ஆற வைக்கவும். நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த பின் ஒரு கடாயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments