Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் கம்பு ஊத்தப்பம் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கம்பு மாவு  - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கம்பு மாவுடன் நீர் கலந்து, தோசை மாவு  பக்குவத்தில் நன்றாக கலந்து கொள்ளவும். ருசிக்கு தகுந்த உப்பு சேர்க்கவும்.
 
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சிறிதளவு உப்புடன் கலந்து வைக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிய  பின், கம்பு மாவு கலவையை தடித்த தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
 
தோசை மீது தாராளமாக வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், குடை மிளகாய் கலவையை தூவி வேகவைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வேக வைக்கவும். சூப்பரான கம்பு ஊத்தப்பம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments