Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் செய்ய...

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சாதம் - 4 கப் (வடித்து ஆற வைத்தது)
கறிவேப்பிலை -  ஒரு கைப்பிடியளவு
இஞ்சி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - சிறிதளவு
வற்றல் மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
சீரகம் - சிறிதளவு
புதினா - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு

 
 
செய்முறை: 
 
எலுமிச்சை சாறு எடுத்து தனியே வைத்து கொள்ளவும். வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை,  சீரகம் ஆகிய பொருட்களை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். புதினா, கறிவேப்பிலை, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகிய பொருட்களை அரைத்து கொள்ளவும். 
 
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து  அரைத்த விழுது மற்றும் அரைத்த பொடியை போட்டு கலந்து பச்சை வாசனை போனதும் சாதத்தோடு கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார். 
 
குறிப்பு:
 
கறிவேப்பிலை: எண்ணெயில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். எண்ணெயில் பொறிக்கும் உணவுகளில் அதிக கொழுப்பிருக்கும். அதனை குறைக்க நினைப்பவர்கள் எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து  வடிகட்டினால் போதும். எண்ணெயில் உள்ள கொழுப்பு கரைந்துவிடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments