Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஸி வெஜிடபிள் ரைஸ் செய்ய...

Webdunia
தேவையான பொருட்கள்
 
வடித்த சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி)
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
குட மிளகாய் - 1
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1
பட்டை - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 1
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
சர்க்கரை - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
சாதத்தை கொஞ்சம் உதிரி உதிரியாக வடித்து ஆற வைக்கவும். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய  வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப்  போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
 
பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும். அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். 
 
அடிக்கடி கிளறி விடவும். பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டு குழையாமல் கிளற வேண்டும். இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments