Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய....!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
மிளகாய் வத்தல் - 1/4 கிலோ
கொத்தமல்லி தழை - 300 கிராம்
சீரகம் - 100 கிராம்
துவரம் பருப்பு - 50கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
செய்முறை: 
 
முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து  வறுத்து கொள்ளவும்.
 
வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை  உபயோகிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments