முருங்கை கீரை சூப் செய்ய...

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
முருங்கை இலை - 2 கப் 
கேரட் துருவல் - அரைகப் 
தேங்காய் துருவல் - அரைகப்
பெரிய வெங்காயம் - 2 
இஞ்சி துண்டுகள் - 3 
பூண்டு - 1 
மல்லி இலை - ஒரு பிடி 
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
 
 
செய்முறை: 
 
முருங்கை இலையை நார் இல்லாத அளவுக்கு சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தையும், இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும். மல்லி இலையையும் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். 
 
நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். கேரட் துருவல், தேங்காய் துருவல், பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவையுங்கள். வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி சூடாக்குங்கள். சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள். அதையும், வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு ஓடவிடுங்கள். அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள். அத்துடன் மிளகுதூள், காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும். சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப் தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments