Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்ய வேண்டுமா...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 11/2 கப்
வெந்தயக் கீரை - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
தண்ணீர் - சுமார் 1/2 கப்
மிளகாய்த் தூள்  -1  டீஸ்பூன்
தனியாத் தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சீரகம், ஓமம்  - 1டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
செய்முறை:
 
கீரை, பொடிவகைகள், உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும். கோதுமை மாவையும் சேர்க்கவும். சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு பிசைந்துகொள்ளவும். பின்னர் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 
சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும். காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா, ஊறுகாய், வெண்ணெய்,  தேன் இவை பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments