Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெட் மஞ்சூரியன் செய்ய....

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பிரெட் துண்டுகள் - 4
தக்காளி - 2
வெங்காயம் - 2
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து சாறெடுத்துக்கொள்ளுங்கள். 
 
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments