Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்ரூட் சட்னி

பீட்ரூட் சட்னி

Webdunia
எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னி வகைகளை செய்து சாப்பிட்டால் எப்படி? விதவிதமான சட்னி வகைகளையும், அதாவது உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டு பாருங்க...
 
தேவையான பொருட்கள்:
 
பீட்ரூட் - 2
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கீற்று
தேங்காய் - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 4
புளி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
* தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும், தேங்காயை சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.
 
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய் முதல் சின்ன வெங்காயம் வரை உள்ள‌ பொருட்களை வதக்கி ஆற‌வைக்கவும்.
 
* பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை வதக்கி நீர் தெளித்து வேகவைக்கவும்.
 
* வதக்கி ஆறவைத்த பொருட்களுடன் புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்து, பிறகு பீட்ரூட்டையும் அதனுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும். சுவையான‌ பீட்ரூட் சட்னி தயார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments