Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி....

Webdunia
தேவையானவை: 
 
பன்னீர் துண்டுகள் - அரை கப், 
சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் - அரை கப் (வேக வைத்தது) , 
வெங்காயம் - ஒன்று, 
பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா கால் கப், 
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், 
பச்சை மிளகாய் - 3, 
எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன், 
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை, 
சாட் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன், 
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, 
எண்ணெய் - 4 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளை போட்டு வதக்கி, லேசான பிரவுன் கலர் வரும் வரை சூடுபட கிளறி எடுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளையும் வதக்கி எடுக்கவும். 
 
கடாயில் எண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பட்டாணி, கேரட் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, அஜினமோட்டோ சேர்த்துக் கிளறவும். எல்லா காய்களும் வெந்ததும் பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து  இறக்கிவிடவும். கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, 
கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

பலவகை சத்துக்களை கொண்ட சாமை அல்வா..! ஈஸியா செய்யலாம்?

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments